உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொதுமக்களுக்கு இடையூறு இல்லை: அ.தி.மு.க., தங்கமணி

பொதுமக்களுக்கு இடையூறு இல்லை: அ.தி.மு.க., தங்கமணி

ராசிபுரம், ராசிபுரத்தில், நேற்று, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சியில், இ.பி.எஸ்., பேசவுள்ள இடத்தை முன்னாள் அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது: இங்குள்ள மருத்துவமனைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தான் பேனர்கள் அமைத்துள்ளோம். தி.மு.க.,வினர் ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் என பேசுகின்றனர். இந்த தடவையும் ஆம்புலன்ஸ் வருமா, என சந்தேகமாக உள்ளது. 'அ.தி.மு.க., பிரசார பயணம் செய்யும் பகுதி மருத்துவமனை நிறைந்த பகுதி. மருத்துவமனை சுற்றி பேனர்கள் அமைத்து விட்டார்கள்' என, நாமக்கல் தி.மு.க., மாவட்ட செயலாளர் கூறியுள்ளார். இப்பகுதியில், மூன்று மருத்துவமனைகள் உள்ளன. கடைகளுக்கு செல்ல முடியாவில்லை என வணிகர்கள் புகார் செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் கடைகள் கிடையாது, வேண்டுமென்றே குற்றம் சாட்டியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி