உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டில் திருடர்களால் அச்சம்

கரூர் பஸ் ஸ்டாண்டில் திருடர்களால் அச்சம்

கரூர்: தமிழகத்தில், தொழில் நகரத்தில் ஒன்றான கரூரில், பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, சுத்தம் இல்லாத கழிப்பிடங்கள், குண்டும், குழியுமான தரைத்தளங்கள், ஆக்கிரமிப்புகள் என பல குறைபாடுகள், கரூர் பஸ் ஸ்டாண்டில் நிறைந்துள்ளன. மேலும், குடிநீர் வசதி, மழை மற்றும் வெயில் காலங்களில் பய-ணிகள் நிற்க கூட அடிப்படை வசதி இல்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கரூர் பஸ் ஸ்டாண்டில், பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்-பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் பயணிகளை திசை திருப்பி, பாக்கெட்டில் உள்ள பணத்தை திருடி செல்லும் அவலம் நடந்து வருகிறது.பஸ் ஸ்டாண்ட் அருகே மனோகரா கார்னரில் உள்ள, புறக்காவல் நிலையத்தில், போலீசார் பெரும்பாலும் இருப்பது இல்லை. இதனால், பிக்பாக்கெட் திருடர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நாள்தோறும், 30 பயணிகள் வரை பணத்தை பிக் பாக்கெட் மூலம் பறிக்கொடுக்கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்டில் உள்ள அனைத்து மின் விளக்குக-ளையும், எரியும்படி செய்ய வேண்டும். மேலும், மனோகரா கார்-னரில் உள்ள புறக்காவல் நிலையத்தில், நாள்தோறும் போலீசாரை பணியில் நியமிக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !