உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு

திருக்குறள் பேரவை நுால் போட்டி வெற்றி பெற்றவர்கள் அறிவிப்பு

கரூர், : திருக்குறள் பேரவை சார்பில் நடந்த, நுால் போட்டியில், வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியாகியுள்ளது.இதுகுறித்து, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:கரூர் திருக்குறள் பேரவையின், 39 வது ஆண்டு விழாவும், குன்றக்குடி அடிகளாரின், 100 வது ஆண்டு விழாவும் வரும், 26ல் கரூரில் நடக்கிறது. அதற்காக நடந்த, நூல் போட்டியில், 76 நுால்கள் வரப்பெற்றது. அதில் முதல் பரிசாக, 5,000 ரூபாய், மதுரை பத்திரிக்கையாளர் திருமலை எழுதிய 'நமக்கு எதற்கு வம்பு' என்ற நூல் பெறுகிறது.இரண்டாம் பரிசாக, புதுச்சேரி தமிழ் பேராசிரியர் கிருங்கை சேதுபதியின், 'என்றும் வாழ்கிறார்கள்' என்ற கவிதை நூல் பெறுகிறது. மூன்றாவது பரிசாக, 2,000 ரூபாயை, சென்னை புனிதவதி எழுதிய 'தாமரை நெஞ்சம்' என்ற நூல் பெறுகிறது.மேலும், மாணவர்கள் கட்டுரை போட்டியில், 40 பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும், சான்றிதழ், பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி