திருவள்ளுவர் தினவிழா கொண்டாட்டம்
கரூர்: தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளமதி தலைமை வகித்தார். தாந்தோன்றி வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்தார். விழாவில் துணைத்தலைவர் பூங்கோதை, பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெரால்டு உள்பட பலர் பங்கேற்றனர்.