வாய்க்காலில் முட்புதர் தண்ணீர் செல்வதில் சிக்கல்
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் வாய்க்காலில், நாணல் செடிகள், முட்புதர்கள் வளர்ந்து வருவதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் வாய்க்காலில் இருந்து பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. வாயக்கால் தண்ணீர் மூலம் விவசாயிகள் நெல், வாழை, வெற்றிலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பாசன வாய்க்காலில், அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து புதர் போல் மண்டியுள்ளதால், குறைந்த தண்ணீரே செல்கிறது. இதனால் சாகுபடி நிலங்களுக்கு செல்லும் தண்ணீர் குறைகிறது. மேலும், விளைந்து வரும் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாசன வாய்க்காலில் வளர்ந்து வரும் முட்புதர்களை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.