உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும்

மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும்

கரூர், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள, காவிரி ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடக்கிறது என தொடர்ந்து கொடுத்த புகார் அடிப்படையில், 26 லாரிகள் பறிமுதல் செய்து, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும், மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். காவிரி ஆற்றில் தண்ணீர் வளத்தை பாதுகாக்கும் வகையில், மணல் திருட்டை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி ஆற்றில் விஷக்கழிவுகள் கலந்து, கரையில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. மணல் இல்லாமல் குடிநீரும் விஷமாகியதன் விளைவே, இதுபோன்ற நோய்களுக்கு காரணம். தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 2017ல், அரசு உத்தவுபடி, வெளிநாட்டு இயற்கை ஆற்று மணலை மாதம்தோறும், 15 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்து, தமிழ்நாட்டின் மணல் தேவையை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ