உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீடுகளின் பூட்டை உடைத்து திருட திட்டமிட்டவர்கள் கைது

வீடுகளின் பூட்டை உடைத்து திருட திட்டமிட்டவர்கள் கைது

வீடுகளின் பூட்டை உடைத்து திருட திட்டமிட்டவர்கள் கைதுகரூர், அக். 18-அரவக்குறிச்சி, வெள்ளியணை பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட திட்டமிட்ட, இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகில் கடந்த, 16 நள்ளிரவு, 1:30 மணிக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரு நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். திடீரென அதில் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து போலீசார் மீது அடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அவர்களை, பிடித்து அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.அங்கு, குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினத்தை சேர்ந்த சூரியமூர்த்தி மகன் கோகுல், 27, திருச்சி மாவட்டம், தொட்டியத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் கோகுல்நாத், 21, என தெரிய வந்தது. இவர்கள் வைத்திருந்த பையில் இரும்பு ராடுகள், திருப்புலி, மாஸ்க், கிளவுஸ், பெப்பர் ஸ்பிரே, பெட்ரோல் வைத்திருந்தனர்.இவர்கள் அரவக்குறிச்சி, வெள்ளியணை பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதற்காக வந்தது தெரியவந்தது. வெள்ளியணை போலீசார், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை