உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் சூரசம்ஹார விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

கரூரில் சூரசம்ஹார விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசம்

கரூர், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் எதிரே, நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 22ல் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபி ேஷகம், லட்சார்ச்சனை நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி மகா அபிேஷகம், மாலை, 4:30 மணிக்கு சக்திவேல் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவில் எதிரே சூரனை, முருகப்பெருமான் வதம் செய்யும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா என கோஷமிட்டு, சுவாமியை வழிபட்டனர்.பிறகு, கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும், உற்சவர் முருகப்பெருமான் ஊர்வலம் நடந்தது. இன்று காலை, 10:30 முதல், 11:00 மணி வரை திருக்கல்யாண உற்சவம், மாலை, 6:00 மணிக்கு உற்சவர் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை