மேலும் செய்திகள்
டூவீலர் மீது கார் மோதி விபத்து: முதியவர் பலி
02-May-2025
கரூர் வேலாயுதம்பாளையம் அருகே, டெக்ஸ் ஊழியரிடம் மொபைல் போன், பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், வெண்ணைமலை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக், 28, டெக்ஸ் ஊழியர். இவர் கடந்த, 16ல் சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலை ஆத்துார் பிரிவில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இயற்கை உபாதைக்காக கார்த்திக் டூவீலரை நிறுத்தியுள்ளார். அப்போது மற்றொரு டூவீலரில் சென்ற, மூன்று பேர் கார்த்திக்கை மிரட்டி மொபைல் போன் மற்றும், 47 ஆயிரத்து, 500 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, பணம் மற்றும் மொபைல் போனை பறித்ததாக வேலாயுதம்பாளையம் சரவணன், 21, புஞ்சை புகழூர் ரூபன், 22, இப்ராஹூம், 20, ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.
02-May-2025