உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உள்பட மூவர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு கொடுமை கணவர் உள்பட மூவர் மீது வழக்கு

குளித்தலை:குளித்தலை அடுத்த மாவத்துார் பஞ்., மசாலுார் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகள் தீபா, 28; இவர், திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சூகமடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ராஜா, 31, என்பரை, இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த, 2026 ஜன., 28ல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமாகி, ஐந்து நாட்கள் மட்டுமே குடும்பம் நடத்தினர். அதை தொடர்ந்து, கணவர் ராஜா, பொள்ளாச்சியில் உள்ள பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.வீட்டிலிருந்த தீபாவிடம், மாமனார் பழனிச்சாமி, மாமியார் இளஞ்சியம் ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். கொடுமை தாங்காத தீபா, கணவர் வேலை செய்யும் பொள்ளாச்சிக்கு சென்றார். அங்கு ராஜா, 'ஏன் இங்கு வந்தாய்' என தகாத வார்த்தைகளால் திட்டி, குடும்பம் நடத்த மறுத்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த தீபா, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அளித்த புகார்படி, கணவர் ராஜா மற்றும் மாமனார் பழனிச்சாமி, மாமியார் இளஞ்சியம் ஆகிய மூவர் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !