மக்களுக்கு இடையூறு தந்த மூவர் கைது
குளித்தலை:திருச்சி மாவட்டம், இனாம் குளத்துார் கீழத்தெருவை சேர்ந்த வசந்த், 22, கோப்பு கீழத்தெருவை சேர்ந்த பரமேஸ்வரன், 23, மேலப்பட்டி புவனேஸ்வரன், 19, மற்றும் பெயர் விலாசம் தெரியாத ஒருவர் என நான்கு பேர் டிவிஎஸ் 50 மொபட்டில், நான்கு வாகனங்களுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து இயந்திரங்கள், உதிரி பாகங்களை மாற்றம் செய்து, போக்குவரத்திற்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், போட்டி போட்டு ஓட்டி சென்றனர். இவர்கள் கடந்த 10ம் தேதி மாலை 5:00 மணியளவில் காவிரி பாலத்தில் மொபட்டை ஓட்டி வேடிக்கை காண்பித்தனர்.மொபட் ஓட்டிய நபர்களில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.