நாளை டாஸ்மாக் விடுமுறை
கரூர்: டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு நாளை விடுமுறை என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற ஹோட்டல்களுக்கு நாளை (2ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது. விதிகளை மீறி, மதுபானம் விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.