மேலும் செய்திகள்
ரேஷன் கடை அரிசி பதுக்கியவர் கைது
08-Oct-2024
கரூர்: மழை காலங்களில், கால்நடைகளை தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும் குறித்த பயிற்சி முகாம் இன்று நடக்கிறது என, பண்டுதகாரன் புதுார் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுத-காரன் புதுாரில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும் குறித்த ஒரு நாள் பயிற்சி இன்று (25ம் தேதி) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. விவசாயிகள், கால்நடை பண்ணையாளர்கள் கலந்து கொண்டு, மழை காலங்களில் கால்நடை-களை நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 04324 -294335 மற்றும் 73390 57073 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
08-Oct-2024