உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறை காவலர் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

சிறை காவலர் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

கரூர், கரூர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இரண்டாம் நிலை சிறை காவலர் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு செப்., 10 முதல் தொடங்குகிறது.கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் தேர்வு பயிற்சி வகுப்பு வரும், 10ல் தொடங்கப்படவுள்ளது. பயிற்சி வகுப்பில் சேரவிரும்பும் மனுதாரர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார்அட்டை நகல் உடன் அலுவலகம் வர வேண்டும்.இங்கு ஸ்மார்ட் போர்ட், அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறுதேர்வு, வாராந்திர தேர்வு, இணையவழித் தேர்வு, முழு மாதிரி தேர்வு, மென்பாடக் குறிப்புகள் எடுத்துக் கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி என அனைத்து வசதிகளுடன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு 04324-223555, 9499055912 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை