உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மானாவாரி சாகுபடி குறித்து மகளிர் குழுவுக்கு பயிற்சி

மானாவாரி சாகுபடி குறித்து மகளிர் குழுவுக்கு பயிற்சி

குளித்தலை: குளித்தலை அடுத்த தோகைமலையில் செயல்பட்டு வரும் சிநேகிதி அறக்கட்டளை மற்றும் அகப்பி யு.எஸ்.ஏ., ஆகியவை சார்பில், மானாவாரி சாகுபடி உத்திகள், இயற்கை முறையில் சிறுதானிய சாகுபடி தொடர்பாக, 50 ஆதிதிராவிடர் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும், வங்கிகள் மூலம் மானாவாரி சாகுபடி செய்ய கடன் உதவி அளிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து அகப்பி யு.எஸ்.ஏ., நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் யாலே பல்கலை இயக்குனர் தாமஸ் போகி மற்றும் இந்தியா திட்ட இயக்குனர் ஸ்ரீலட்சுமி ஆகியோர் திட்ட ஆய்வு மேற்கொண்டனர்.இதில், தோகைமலை திருமாணிக்கம்பட்டியில் மகளிர் குழுவினருடன் அனுபவ பகிர்வு ஆலோசனை நடந்தது. தொடர்ந்து, மானாவாரி சாகுபடி குறித்து கள ஆய்வு நடந்தது. தொடர்ந்து சிநேகிதி அறக்கட்டளை அலுவலகத்தில் திட்டம் தொடர்பான ஆய்வுகள் நடந்தன. இதில் திட்ட இயக்குனர் சத்யா, முதன்மை பயிற்றுனர் மகாலட்சுமி, தன்னார்வலர் சுவாமிநாதன், இயற்கை அறக்கட்டளை இயக்குனர் ஷோபிகா மற்றும் மகளிர் மன்றத்தினர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை