பணம் கொடுத்த வாலிபரை கடித்த திருநங்கை
xகரூர் :கரூரில், வாலிபரிடம் பணம் பறித்து கொண்டு, கடித்த திருநங்கைகளை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.கரூர், அஜந்தா தியேட்டர் அருகே, 20 வயது வாலிபர் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த இரு திருநங்கைகள், நின்று கொண்டிருந்த வாலிபரிடம் பணம் கேட்டனர். உடனடியாக அந்த வாலிபரும்,10 ரூபாய் கொடுத்தார். அப்போது, ஒரு திருநங்கை வாலிபர் பாக்கெட்டில் வைத்திருந்த, 2,000 ரூபாயை பறித்து கொண்டு தர மறுத்தார். இதனால், வாலிபருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது, ஆத்திரமடைந்த திருநங்கை ஒருவர், வாலிபரின் கையை பிடித்து பலமாக கடித்தார். வலியால் வாலிபர் துடித்ததை பார்த்த பொதுமக்கள், திருநங்கைகளை விரட்டினர். கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இரு திருநங்கைகளை விசாரணைக்காக, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். கடிபட்ட வாலிபர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.