உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சாயத்து பாம்பன்பட்டி சாலை, வயலுார் மழைநீர் சேமிப்பு குளக்கரை ஆகிய பகுதிகளில் பஞ்., சார்பில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் வேம்பு, புளியன், ஈட்டி, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது. தற்போது அதிகமான வெயில் அடிப்பதால், மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலி அமைப்பது, தண்ணீர் ஊற்றும் பணிகள் நடக்கிறது. இந்த பணிகளில் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி