டி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
கரூர், கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக விமல்ராஜ் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.கரூர் மாவட்ட டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த கண்ணன், சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். கரூர் ( நிலம் எடுப்பு) டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றி வந்த விமல்ராஜ், கரூர் டி.ஆர்.ஓ.,.வாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ.,வாக பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு, கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.