உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாக்கடை கழிவுநீர் தேங்குவதால் அவதி

சாக்கடை கழிவுநீர் தேங்குவதால் அவதி

கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த இரும்பூதிப்பட்டி பஸ் ஸ்டாப், குளித்தலை - மணப்பாறை செல்லும் சாலையில் உள்ளது. இந்த பஸ் ஸ்டாப்பிற்கு தினமும், 100க்கும் மேற்பட்டவர்கள் பஸ் ஏறுவதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கழிவுநீர் சாக்கடை கால்வாயில் செல்லாமல் சாலையில் செல்கிறது. இரும்பூதிப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் கழிவுநீர் தேங்கி வருவதால், பயணிகள் துர்நாற்றத்தால் தவிக்கின்றனர். எனவே கழிவுநீர் தேங்குவதை சரி செய்து, சாக்கடையில் செல்லும்படி மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை