உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்த இரண்டு பேர் கைது

சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்த இரண்டு பேர் கைது

குளித்தலை, குளித்தலை அடுத்த, தெலுங்கபட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், கருந்தங்காலப்பட்டியை சேர்ந்த வெற்றி வேல், 25, மற்றும் 15 நபர்கள் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்து, பொது இடத்தில் மக்களுக்கு தொந்தரவு செய்தும், போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டனர்.போலீசார் எச்சரிக்கை செய்தும் கேட்காததால் வெற்றிவேல் உள்ளிட்ட, 15 பேர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். இதே போல் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சரவணகுமார், 46, மற்றும் பலர் மீது தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை