உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் இருவர் கைது

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் போக்சோவில் இருவர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த, பாப்பக்காப்பட்டியை சேர்ந்தவர் கொத்-தனார் சக்திவேல், 28. இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், சக்திவேல் அதே பகு-தியை சேர்ந்த, 17 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாக, அவரது மனைவி குளித்தலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் விசா-ரித்து சக்திவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.இதேபோல் மாயனுார் பகுதி யில், சென்ட்ரிங் தொழிலாளி தங்-கராஜ், 35, என்பவர் அதே பகுதியை சேர்ந்த, 7 வயது சிறுமி-யிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடமுயன்றார். சிறுமியின் தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் விசாரித்து, தங்கராஜை போக்சோவில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரையும், கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ