உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கரூர், கரூர் அருகே, கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் நாகம்பள்ளி மூலப்பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கதிரேசன், 32; சின்னதாராபுரம் பி.அணைப்பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி, 67; இவர்கள் இருவரையும் கடந்த செப்., 24ல் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக, கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கதிரேசன், வேலுச்சாமி ஆகிய இரண்டு பேரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜோஸ் தங்கையா, கலெக்டர் தங்கவேலுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி கதிரேசன், வேலுச்சாமியை குண்டர் சட்டத்தின் கீழ், மதுவிலக்கு போலீசார் கைது செய்து, அதற்கான நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள, இரண்டு பேரிடம் நேற்று வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி