ரேஷன் அரிசி கடத்திய இருவருக்கு காப்பு
கரூர்,:குளித்தலை அருகே, ரேஷன் அரிசி கடத்தியதாக இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.கரூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., ராம்குமார் உள்ளிட்ட, போலீசார் நேற்று குளித்தலை அருகே சுங்ககேட் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற மாருதி ஆம்னி வேனை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். அதில், 22 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சேகரிப்பட்டு, திருச்சிக்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி என தெரியவந்தது.இதையடுத்து, வேனில் இருந்த திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த கேசவன், 28; நவீன், 26; ஆகிய இரண்டு பேரை குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர்.