உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அம்மாபேட்டை அருகே விபத்தில் இருவர் பலி

அம்மாபேட்டை அருகே விபத்தில் இருவர் பலி

பவானி: அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; மேட்டூரில் எலக்ட்-ரிக்கல் கடை நடத்தி வந்தார்.குருவரெட்டியூர் சந்தைக்கு மனைவியுடன் சென்-றுவிட்டு, டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டில், குரு-வரெட்டியூர்-அம்மாபேட்டை சாலையில், நேற்று முன்தினம் இரவு திரும்பினர். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆனைக்கல்மேட்டை சேர்ந்தவர் தச-ரதன், 28; சென்னம்பட்டி வனத்துறை வேட்டை தடுப்பு காவலர். பல்சர் பைக்கில் எதிரே அதிவேக-மாக வந்த நிலையில், செந்தில்குமார் மொபட் மீது மோதினார்.செந்தில்குமாருக்கு பலத்த அடிபட்டது. மனைவி லேசான காயத்துடன் தப்பினார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செந்தில்குமார் இறந்தார்.இதேபோல் பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தசரதனும் இறந்தார். சம்-பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் விசா-ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி