மேலும் செய்திகள்
பறிமுதல் வாகனங்கள் வரும் 26ல் பொது ஏலம்
16-Nov-2024
கரூர், டிச. 12-மதுவிலக்கு குற்ற வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள், நாளை ஏலத்தில் விடப்படும் என, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 26 இரண்டு சக்கர வாகனங்கள் ஏலம், நாளை ( 13-ம் தேதி) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. ஏலம் விடப்படவுள்ள வாகனங்களை, கரூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை, 11:00 முதல் மாலை 5:00 மணி வரை நேரில் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள், கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூடுதல் எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில், ஆதார் கார்டு நகல் அல்லது ரேஷன் கார்டு நகலுடன் காப்புதொகையாக, 5,000 ரூபாய்- செலுத்தி இன்று மாலை 5:00 மணிக்குள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் வாகனம் எடுக்கவில்லையெனில், காப்புத்தொகை ஏலம் முடிந்தவுடன் திருப்பி உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதிகபட்ச தொகைக்கு ஏலம் கோரும் நபர், உறுதி செய்யப்பட்ட வாகன ஏலத்தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ள, ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து முழுவதையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, கரூர் மாவட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
16-Nov-2024