உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுத்தம் செய்யாத சாக்கடை சாலையில் மழைநீர்

சுத்தம் செய்யாத சாக்கடை சாலையில் மழைநீர்

கரூர்: காந்திகிராமம் பகுதியில், சாக்கடை சுத்தம் செய்யாததால், சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது.கரூர் காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. இதில், பல சாக்கடை கால்வாய்கள், நீண்ட காலமாக துார் வாரப்படாமல் உள்ளது. இதனால், கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் அதிகளவில் தேங்கியுள்ளன. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் மழைநீர், சாலையில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதார சீர்கேட்டை தடுக்க, கால்வாயை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ