உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஒன்றிய செய்திகள் - கரூர்

ஒன்றிய செய்திகள் - கரூர்

ராஜ வாய்க்காலில்இறைச்சி கழிவுகள்கரூர் -- சேலம் பழைய சாலை வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில், வீடுகள், சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது. மேலும் வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளது. அதில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க் காலில் கொட்டி விடுகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. ராஜவாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.கார்கள் நிறுத்தத்தால்போக்குவரத்து நெரிசல்கரூர் - திருச்சி சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர்சந்தை செயல் படுகிறது. அங்கு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், உழவர் சந்தை அருகே திருச்சி சாலையில் கார்கள், வேன்களை பல மணி நேரம் நிறுத்தி விட்டு பலர் சென்று விடுகின்றனர். அந்த வழியாக திருச்சிக்கு செல்லும் பஸ்கள் நீண்ட வரிசை யில் நின்று விடுகிறது. இதனால் உழவர் சந்தை பகுதியில் கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த, போக்குவரத்து போலீசார் தடை விதிக்க வேண்டும்.சாலைகளை ஆக்கிரமித்தசீமை கருவேல மரங்கள்கொளந்தானுாரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் காலைக்கடன்களை கழிக்கவும், துணி துவைக்கவும், குளிக்கவும் அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்கின்றனர். இதனால், கொளந்தானுாரில் இருந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு செல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது தார் சாலையை மறைக்கும் அளவுக்கு சீமைகருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால், கொளந்தானூரை சேர்ந்த மக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில், தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், சாலையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி