உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடிப்படை வசதிகள் வழங்க கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் வழங்க கோரி யூனியன் அலுவலகம் முற்றுகை

குளித்தலை: குளித்தலை அடுத்த இனுங்கூர் பஞ்., வைரபுரி கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர், சாலை, கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, பஞ்., நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, பாதிக்கப்-பட்ட கிராம மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று குளித்தலை யூனியன் அலு-வலகத்தில் ஒன்றிய செயலாளர் முத்து ச்செல்வன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்களுடன் யூனியன் கமிஷனர் பாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் மற்றும் தெரு விளக்குகளை கோரிக்கையை உடனே நிறைவேற்றி தருவதாகவும், பொது சுகாதார வளாகம் மற்றும் சாலை அமைக்க கருத்துருக்கள் மாவட்ட நிர்வாகத்-திற்கு அனுப்பப்பட்டு, அந்த பணிகளும் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ