அடிப்படை வசதி கேட்டு நா.த.கட்சியினர் மனு
அரவக்குறிச்சி,பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, பல்வேறு பகுதிகளில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.பள்ளப்பட்டி நகர நா.த. கட்சி சார்பில் நகர செயலர் அர்ஷத் தலைமையில், நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டர் தங்கவேலிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில், மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மழை காலத்திற்கு முன்பே கம்பங்களை சரி செய்ய வேண்டும். சாலைகளில் தேங்கும் கழிவு நீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.