உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சமுதாய கூடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தல்

சமுதாய கூடத்தை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வழங்க வலியுறுத்தல்

குளித்தலை: குளித்தலை அருகே, வேங்காம்பட்டியில் ஓராண்டுக்கு மேலாக பாதி கட்டுமான பணியோடு நிற்கும் சமுதாய கூடத்தை, விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை அடுத்த, கருப்பத்துார் பஞ்., வேங்காம்பட்டியில், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 85 லட்சம் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து, 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.1 கோடி மதிப்பில் சமுதாய கூடம் கட்-டுவதற்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது.இந்த இடம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி, தனிநபர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மேலும் கொரானா நோய் தொற்று காரணமாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அடித்தளத்துடன் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்பு, நீதிமன்றத்தின் வழிகாட்டுத-லின்படி ஓராண்டுக்கு முன்பு, மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கியது. இந்நிலையில் இதன் கட்டுமானப் பணிகள் பாதியி-லேயே நிறுத்தப்பட்டன.மேலும், இது குறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுத்து, சமுதாய கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்-பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ