உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

தடாகோவில் பிரிவு சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

கரூர்: கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி விபத்து ஏற்படுவதால், தடாகோவில் பிரிவு சாலை அருகே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், நங்காஞ்சி ஆற்றிலுள்ள தடாகோவில் பாலம் வழியாகத்தான் அரவக்குறிச்சிக்குள் நுழைய வேண்டும். இவ்வழியாக, பழநி, தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக கேரளா செல்லும் வாகனங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி என, நாட்டின் பல பகுதிகளுக்கு பஸ், சரக்கு வாகனங்கள் தினசரி ஏராளமான அளவில் செல்கின்றன. இவ்வளவு அதிகமாக போக்குவரத்து இருக்கும் சாலையை கடந்து தான், அரவக்குறிச்சிக்கு செல்ல வேண்டும்.அரவக்குறிச்சி கிழக்கு பகுதி கிராமங்களான தடாகோவில், கணக்குவேலன்பட்டி, ராசாபட்டி, வெஞ்சமாங்கூடலுார் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, அரவக்குறிச்சிக்கு ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அப்போது, நெடுஞ்சாலையில் வரும் அதிவேக வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின், விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இங்கு, விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க, சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை