உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கால்நடைகளுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

கரூர், கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மின்னாம்பள்ளியில் நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது.அதில், 1,300க்கும் மேற்பட்ட மாடுகள், எருமைகள், ஆடு, வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட, கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், குடற்புழு நீக்குதல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாந்தி, துணை இயக்குனர் ரகமத்துல்லா, உதவி இயக்குனர் உமாசங்கர், கால்நடை மருத்துவர்கள் மோகன் ராஜ், குல்சார் பர்வீன், திருமுருகன், காவியா, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி