உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

கரூர்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், செல்ல பிராணிகளுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் நேற்று, புகழூர் நக-ராட்சி பகுதியில் நடந்தது.அதில், பொதுமக்கள் வீடுகளில் வளர்த்து வரும், 100க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளை அழைத்து சென்று, தடுப்பூசி போட்டனர். முகாமில், காகித ஆலை முதன்மை மேலாளர் சிவக்-குமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் லில்லி, புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், ஆணையாளர் ேஹம-லதா, பொறியாளர் மலர்கொடி, கால்நடை மருத்துவர்கள் கண்ணன், கோபிநாத், சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !