கூட்டுறவு சங்க பாலில் தண்ணீர் கலப்பால் வேன் சிறைபிடிப்பு
குளித்தலை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் பாலில், தண்ணீர் கலந்து முறைகேடு செய்ததை கண்டித்து, பால் வேன் வாக-னத்தை உற்பத்தியாளர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மயிலாடும்பாறை கிரா-மத்தில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. கூட்டு-றவு சங்கத்துக்கு, 40க்கும் மேற்பட்டவர்கள் காலை, மாலை இரு வேளையும் பால் வழங்குகின்றனர். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்-திலிருந்து, பாலை வேனில் ஏற்றி செல்லும் டிரைவர் சூர்யா என்-பவர், அருகில் உள்ள நடுப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் சேகரிக்கப்பட்ட பாலையும் ஏற்றி வருகிறார்.தரம் குறைவுநடுப்பட்டி சங்க செயலாளர், டிரைவர் சூரியா உடந்தையுடன், மயிலாடும்பாறையில் இருந்து கொண்டு வரப்படும் பால் கேனில் தினமும், 20 லிட்டர் பால் எடுத்துக் கொண்டு, அதற்கு ஈடாக தண்ணீரை நிரப்பி உள்ளார். திருமலைரெட்டியப்பட்டி பால் குளி-ரூட்டும் மையத்தில் நடந்த சோதனையில், பால் தரம் குறைந்து வருவதாக சோதனையாளர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தார்.இந்நிலையில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டு வரு-வது குறித்து, சந்தேகத்தின் பேரில் நேற்று காலை, 6:30 மணிக்கு மயிலாடும்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செய-லாளர் பெரியசாமி மற்றும் உற்பத்தியாளர்கள், வேன் டிரைவ-ரிடம் விசாரணை செய்தனர்.நடவடிக்கை தேவை அப்போது டிரைவர் சூரியா, 'நடுப்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர், நல்ல பாலை எடுத்துக்கொண்டு, அதற்கு இணையாக தண்ணீர் கலப்பதை' தெரிவித்தார். இதைய-டுத்து உற்பத்தியாளர்கள் பால் வேனை சிறை பிடித்து, முறைகே-டுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போராட்டம் நடத்தினர்.விசாரணைஇதையடுத்து, கரூர் மாவட்ட ஆவின் உதவி பொது மேலாளர் துரைஅரசன் தலைமையில், விரிவாக்க அலுவலர் சேகர், கால்-நடை மருத்துவர் முருகன், கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் கணேசன் ஆகியோர் நேரில் வந்து, வேன் டிரைவர் சூர்யாவுடன் விசாரணை நடத்தினர்.இது குறித்து ஆவின் உதவி பொது மேலாளர் துரைஅரசன் கூறு-கையில்,'' பால் கேனில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்தது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்-படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.