மேலும் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
06-Sep-2025
குளித்தலை :குளித்தலையில், போலீசார் வாகன சோதனையில், கடத்தப்பட்ட ஒன்றே கால் டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது.குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, குளித்தலை உழவர் சந்தை புறவழிச் சாலையில், வேகமாக வந்த டாடா ஏசி சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி மூட்டைகளை, சாக்கு படுதாவால் மூடியபடி கடத்தியது தெரியவந்தது.இது தொடர்பாக, பஞ்சப்பட்டியை சேர்ந்த கந்தசாமி, 53, என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒன்றே கால் டன் ரேஷன் அரிசியுடன், சரக்கு வாகனத்தை குளித்தலை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.குளித்தலை, தோகைமலை பகுதியில் உள்ள ரேஷன் அரிசியை, கோழி பண்ணைகளுக்கும், அரிசி ஆலைகளுக்கும் கடத்துகின்றனர். மேலும் சிலர், ரேஷன் அரிசியை துாய்மைப்படுத்தி, பின்னர் பொதுமக்களுக்கு புதிய சாக்கு பையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிய வருகிறது. குளித்தலை பகுதியில் தொடர்ந்து நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
06-Sep-2025