உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் பள்ளி சாலையில் வாகனங்கள் நிறுத்தம் கரூரில் பொதுமக்கள், மாணவியர் அவதி

மகளிர் பள்ளி சாலையில் வாகனங்கள் நிறுத்தம் கரூரில் பொதுமக்கள், மாணவியர் அவதி

கரூர்: கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில், பகல், இரவு நேரத்தில் வேன், லாரிகள் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள், பள்ளி மாணவியர் பெரும் அவதிப்படுகின்றனர்.கரூர் நகரின் மைய பகுதியான ஜவஹர் பஜாரையொட்டி, பசுப-தீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி உள்ள சாலையின் வழியாக, புலியூர், காந்தி கிராமம், தான்தோன்-றிமலை, ராயனுார், வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, கரூர் மாநகராட்சி கஸ்துாரிபாய் தாய் சேய் மருத்துவம-னைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், அருகில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரா கோவிலுக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இருந்து நாள்தோறும் பக்தர்கள் வருகின்-றனர். நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இந்நி-லையில், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் பகல், இரவு நேரத்தில் லாரிகள் மற்றும் மினி வேன்கள் நிறுத்தப்-படுகின்றன. குறிப்பாக, குடியிருப்புகளை மறைத்து லாரிகள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில், ஜவஹர் பஜாரில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வருகிறவர்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்-களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக வீடுக-ளுக்கு முன்னால் லாரிகளை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால், லாரிகள் மீது ஏறி, திருடர்கள் வீடுகளுக்குள் குதித்து பொருட்களை எடுத்து சென்று விடுகின்றனர். மேலும், தாய் சேய் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்லும், பெண் நோயாளிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவி-யர்களுக்கும் தொல்லை ஏற்படுகிறது. எனவே, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் லாரி, வேன்களை நிறுத்-துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை