மேலும் செய்திகள்
விஜயகாந்த் நினைவு தினம் தே.மு.தி.க.,வினர் அஞ்சலி
29-Dec-2024
கிருஷ்ணராயபுரம், டிச. 29-தே.மு.தி.க., நிறுவன தலை வர் விஜயகாந்தின், முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, பஞ்சப்பட்டி, வல்லம், லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வேங்காம்பட்டி, கிருஷ்ணராயபுரம், மாயனுார், மணவாசி ஆகிய பகுதிகளில், அக்கட்சி சார்பில் அவரது உருவ படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.* அரவக்குறிச்சியின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரவக்குறிச்சி ஏ.வி.எம்., கார்னரில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தரு தன்னார்வ அறக்கட்டளை மூலம் வேலம்பாடி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
29-Dec-2024