உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கீரனுார் டவுன் பஸ் நிறுத்தம் கிராம மக்கள் தவியாய் தவிப்பு

கீரனுார் டவுன் பஸ் நிறுத்தம் கிராம மக்கள் தவியாய் தவிப்பு

கீரனுார் டவுன் பஸ் நிறுத்தம்கிராம மக்கள் தவியாய் தவிப்புகரூர், டிச. 2-கரூர், கீரனுார் டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மீண்டும், அந்த வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூரில் இருந்து கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட கீரனுார் வரை அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கரூரில் இருந்து காந்திகிராமம், புலியூர், வீரராக்கியம், ஆர்.புதுக்கோட்டை, வளையல்காரன்புதுார், நத்தமேடு, கோரக்குத்தி, கருப்பூர், கோமாளிப்பட்டி, உடையாப்பட்டி, சின்னதேவன்பட்டி, கீரனுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த பஸ் சென்றுவந்தது. வளையல்காரன்புதுார் முதல் கீரனுார் வரையிலான பகுதி, பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாக இருப்பதால் இப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களில் பெரும்பாலானோர் கட்டட தொழிலாளர்களாகவே உள்ளனர். இவர்கள், கரூருக்கு செல்ல, இந்த பஸ் மிகவும் வசதியாக இருந்தது. பஸ் பாடி, ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிவோர் என ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.கடந்த, 2020ல் கொரோனா பரவல் நேரத்தில் பஸ் இயக்குவது நிறுத்தப்பட்டது. மீண்டும் கரூர் -கீரனுார் வழிதடத்தில் இதுவரை, பஸ் இயக்கப்படவில்லை. இங்கு சுற்றியுள்ள, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 13 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறி செல்ல வேண்டியுள்ளது. எனவே நிறுத்தப்பட்ட கரூர் - -கீரனுார் பஸ்சை, மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை