அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்: ஆற்றுப்பகுதியில் வறட்சி
கரூர்:அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், கரூர் அருகே அமராவதி ஆற்றுப்பகுதிகள் வறட்சியாக காணப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் கடந்த, 15 நாட்களாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், கரூர் அருகே செட்டிப்பாளையம் அணை, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. ஆற்றுப்பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளன.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, 13 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 48.59 அடியாக இருந்தது.மாயனுார் கதவணைகரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 433 கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 9.22 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.