அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும்
கரூர் ;அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குளிக்கும் இடங்களில், எச்சரிக்கை போர்டுகள் வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அமராவதி அணையில் இருந்து, நேற்று காலை முதல் வினாடிக்கு, 167 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 88.52 அடியை தாண்டியுள்ளதால், எந்நேரமும் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் என, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் போது, அமராவதி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். கரூரில் செல்லாண்டிபாளையம், திருமா நிலையூர், பசுபதிபாளையம், சணப்பிரட்டி, மேலப்பாளையம், கோயம்பள்ளி, பெரிய ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள், அமராவதி ஆற்றில் குளிப்பது வழக்கம். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும் போது, மணல் தோண்டப்பட்ட குழிகள் மறைந்துள்ளது தெரியாது. அப்போது, விபரம் தெரியாமல் பொது மக்கள் இறங்கி குளிக்கும் போது, புதை மணலில் சிக்கி உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. அந்த இடங்களை உடனடியாக கண்டறிந்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், எச்சரிக்கை போர்டுகளை, உடனடியாக வைக்க வேண்டும்,