மேலும் செய்திகள்
சிறு பாசன கணக்கெடுப்பு வருவாய்த்துறை தீவிரம்
18-Oct-2025
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் நீரேற்று கிணற்றின் மீது கோரை வைக்கப்பட்டுள்ளதால் குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளது.வேலாயுதம்பாளையம் அருகே, தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் பல்வேறு டவுன் பஞ்., மற்றும் பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக, காவிரி ஆற்றோரம் நீரேற்று கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தவுட்டுப்பாளையம் பகுதியில் கோரை அறுவடை நடக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், காய வைக்க நீரேற்றும் கிணற்றின் மீது கோரைகளை அடுக்கி உள்ளனர். இதனால் கோரையிலிருந்து விழும் துாசிகள், கிணற்றின் மூடி இடைவெளி வழியாக குடிநீரில் கலக்கும் அபாயம் உள்ளது.கோரை மழையில் நனையும் போது, அந்த நீர் கிணற்றில் இறங்கி பாதிக்கப்படும். எனவே, கோரையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18-Oct-2025