திருமாநிலையூரில் வலுவிழந்து வரும் பாசன வாய்க்கால் பாலம்
கரூர், கரூர் திருமாநிலையூரில், பாசன வாய்க்கால் பாலம் வலுவிழந்து உள்ளதால், மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.கரூர் திருமாநிலையூரில், அமராவதி ஆற்றின் பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து செல்ல வசதியாக சிறிய பாலம் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால், சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலம் தற்போது வலுவிழந்து விழும் நிலையில் உள்ளது. இதில், தடுப்புச்சுவர்கள் இல்லை. இந்த பகுதி மக்கள் வலுவிழந்த பாலத்தில், தடுமாறி பயணித்து வருகின்றனர். இரவு நேரத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.