களை கட்டிய விநாயகர் சதுர்த்தி சிலைகள் விற்பனை படுஜோர்
கரூர், கரூரில், நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, களிமண் சிலைகள் உள்ளிட்ட, பூஜை பொருட்கள் விற்பனை ஜோராக நட ந்தது.நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்று பொது இடங்களில், ஹிந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, பொது நல அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.கரூர் மாவட்டத்தில், நேற்று அனைத்து கோவில்களிலும், விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம் போல், வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி, அருகம்புல், எருக்கம் பூ மாலை, பழ வகைகள், மா இலை, வாழை மரம், வீடுகளில் வைத்து வணங்ககூடிய சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஜோராக நடந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன், பூஜைக்குரிய பொருட்களை கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட், கரூர், வெங்கமேடு, வேலாயுதம் பாளையம் உழவர் சந்தைகளில் நேற்று வாங்கினர்.