உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / களைகள் அகற்றும் பணி தொழிலாளர்கள் துரிதம்

களைகள் அகற்றும் பணி தொழிலாளர்கள் துரிதம்

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் கிராமத்தில், நெல் சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணி துரிதமாக நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பிச்சம்பட்டி பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இதில், ஆந்திரா பொன்னி நாற்று நடவு செய்யப்பட்டுள்ளது. பாசன வாய்க்காலில் வரும் தண்ணீரை கொண்டு, நெல் பயிர்களுக்கு பாய்ச்சப்படுகிறது. தற்போது பயிர்கள் நடுவில் களைகள் அதிகமாக முளைப்பதால், வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. இதையடுத்து, களை எடுக்கும் பணிகளில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை