உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரத்தில் உள்ளமுற்செடிகளை அகற்றலாமே

சாலையோரத்தில் உள்ளமுற்செடிகளை அகற்றலாமே

குளித்தலை :குளித்தலை அடுத்த, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில், வதியம் முதல் தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதுார் சோதனை சாவடி வரை சாலையின் இருபுறங்களிலும், தொடர்ந்து பெய்த மழையால் செடி, கொடிகள் மற்றும் முற்செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளன.இதேபோல், ராணிமங்கம்மாள் நெடுஞ்சாலை, தோகைமலை, திருச்சி நெடுஞ்சாலை ஆர்.டி.மலை பஞ்., அய்யர்மலை முதல் குமாரமங்கலம் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியின் இருபுறங்களிலும் தொடர்ந்து பெய்த மழையால், செடி கொடிகள், முற்செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் சாலையில் பைக். மொபட், சைக்கிள் ஓட்டி செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !