உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.9.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.9.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 9.90 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி வழங்கினார்.கரூரில் வெங்கமேடு, மண்மங்கலம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி முன்னிலை வகித்து பேசினார். வருவாய் துறை சார்பில், 13 பேருக்கு ஜாதி சான்றிதழ், வருமான சான்று, இருப்பிட சான்று, முதல்பட்டதாரி சான்று, சிறு குறு விவசாயிகளுக்கு சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மேலும் கூட்டுறவு துறை சார்பில், ஆறு பேருக்கு, 4.92 லட்சம் ரூபாய் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடனுதவி, மாநகராட்சி சார்பில், 6 பேருக்கு சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், கரூர் நகர கூட்டுறவு வங்கி சார்பில் ஒருவருக்கு, 4.98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீட்டு அடமான கடனுதவி என மொத்தம், 26 பேருக்கு, 9.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கரூர் எம்.எல்.ஏ.,செந்தில் பாலாஜி வழங்கினார்.முகாமில், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், டி.ஆர்.ஓ., கண்ணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, மண்டலக்குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை