உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

குளித்தலை: குளித்தலை அடுத்த தென்னிலை பஞ்., அம்மாபட்டி கிரா-மத்தை சேர்ந்தவர் மாணிக்கவாசகம், 25. இவரது மனைவி லீலா-வதி, 19. இருவரும் கொசுவலை கம்பெனிக்கு வேலை செய்து வருகின்றனர்.கடந்த 28 மதியம் 3:30 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள வாரி காட்டில் மாடு மேய்ப்பதற்காக, தனது அக்கா மோகனப்பிரி-யாவுடன் லீலாவதி சென்றார். பாத்ரூம் சென்று வருவதாக லீலா-வதி கூறினார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் திரும்பாததால் பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்க-வில்லை.தனது மனைவியை காணவில்லை என, மாணிக்கவாசகம் கொடுத்த புகார்படி, சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ