உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

குளித்தலை,:குளித்தலை அடுத்த, கடவூர் யூனியன் ரெங்கப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணமூர்த்தி, 35. இவர் அதே பகுதியை சேர்ந்த கீர்த்தனா, 21, என்பவரை ஆறு மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ராமகிருஷ்ணமூர்த்திக்கு கடந்த, 26 காலை உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டில் இருந்த கீர்த்தனாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது மனைவியை காணவில்லை என, ராமகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !