உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுப்பன்றி நடமாட்டம்

புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் காட்டுப்பன்றி நடமாட்டம்

கரூர் கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, செல்லாண்டிபாளையத்தில் காட்டுப்பன்றி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.கரூர் மாவட்டத்தில், 3 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளன. இங்கு வனப்பகுதி மிகவும் குறைவு என்பதால், மிருகங்கள் நடமாட்டம் இருக்காது. சமீப காலமாக கோவை, திண்டுக்கல், ஈரோடு மாவட்ட வனபகுதியிலிருந்து வெளியேறும் மான், காட்டு எருமைகளின் நடமாட்டம் இங்கு காணப்படுகிறது. இந்நிலையில், கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, செல்லாண்டிபாளையத்தின் வயல் பகுதியில் காட்டுப்பன்றி நடமாட்டம் உள்ளது.இங்குள்ள குப்பையை கிளறி உண்ணும் காட்டுப்பன்றிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன. அங்குள்ள மக்கள், அதனை விரட்டி அடித்து வருகின்றனர். காட்டுப்பன்றி நடமாட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே காணப்படுகிறது.இது குறித்து கரூர் வனவர் ஈஸ்வரி கூறுகையில்,'' கரூர் பகுதியில் காட்டுப்பன்றி வர வாய்ப்பு இல்லை. இங்கு, வளர்க்கப்படும் பன்றிகளை பார்த்து விட்டு, காட்டுப்பன்றி என்று கூறலாம். இருந்தாலும் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை