குப்பையில் கிடக்கும் மனு தெளிவாக இருக்குமா? அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி
கரூர்: ''கரூரில், குப்பையில் கிடந்ததாக காட்டும் மனுக்கள், தெள்ளத் தெளிவாக இருக்குமா,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார்.கரூர், உழவர் சந்தை எதிரில், தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்-தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி தலைமை வகித்தார். மின்துறை அமைச்சரும், மாவட்ட செயலரு-மான செந்தில்பாலாஜி பேசியதாவது:தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறை-வேற்றப்பட்டு வருகிறது. இதில், மாதம், 1,000 ரூபாய் மகளிர் உரிமை திட்டம், தற்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில் செயல்-படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள், தேர்தல் வாக்குறுதியாகவும் அளித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லுாரி, அரவக்குறிச்சியில் கலைக்கல்லுாரி, புதிய காவிரி குடிநீர் திட்டம், 137 கோடி ரூபாய் மதிப்பில் கரூர்-கோவை நான்கு வழி சாலை திட்டம் செயல்ப-டுத்தப்படுகிறது. ஒரே ஒரு தடவை வெறும், 441 ஓட்டு வித்தியா-சத்தில் ஒருத்தர் (அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கர்) ஜெயித்து விட்டார். இப்படி சொன்னாலே எல்லா-ருக்கும் புரியும்னு நினைக்கிறேன். அவர் அமைச்சராக இருந்த போது, எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை.இதுமட்டுமின்றி அவர், 2021ல், வாங்கின மனுக்கள் குப்-பையில் கிடந்ததாக காட்டுகிறார். குப்பையில் கிடந்த மனு அழுக்கே ஆகலையா, இல்ல மழையே பெய்யலயா. அதுக்கு மேல எந்த குப்பையும் போடலையா. அதுல ஒரு சொட்டு கரையே இல்லாமல் ரொம்ப தெள்ளத்தெளிவாக இருந்தது. நீங்கள் பண்ணும் தவறையாவது சரியாக செய்ய வேண்டும். சொல்லக்கூடிய கருத்தாவது நம்புற மாதிரி இருக்கணும். அவங்க-ளோட பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அமாவாசை கணக்கு சொல்லி கொண்டு இருக்கிறார். அமாவாசை, பவுர்ணமி எத்தனை வந்தாலும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி தான் நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், எம்.பி., கிரிராஜன், எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சர-வணன், மண்டல தலைவர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.